எங்கள் நோக்கம்
பூசாரிகளை ஒருங்கிணைத்து, அவர்களின் ஆன்மீக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு உழைத்தல்
தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களிலும் நகரங்களிலும் பூஜை செய்யும் மெய்யன்பர்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இயக்கம் தான் சமூக நலப்பேரவை. பரம்பரை பரம்பரையாக ஆன்மீக தொண்டினை செய்துவரும் பூசாரிகளை ஒற்றுமைப்படுத்தி, அவர்களின் ஆன்மீக முன்னேற்றம், பூஜை செய்யும் முறைகளை கற்றுக்கொடுத்து பொருளாதார முன்னேற்றம் அடையச்செய்வதே எமது நோக்கம்.
2018-ம் ஆண்டு பதிவு எண் 1/2018 உடன் தொடங்கப்பட்ட இப்பேரவை, இன்று வரை தொடர்ந்து பயிற்சி முகாம்கள், விழிப்புணர்வு கருத்தரங்கங்கள் மற்றும் நலத்திட்ட வலியுறுத்தல்களை மேற்கொண்டு வருகிறது.
"இணைந்து செயல்படுவோம் ஆலயம் காக்க"
— கிராமக் கோவில் பூசாரிகள் சமூக நலப்பேரவையின் குறிக்கோள்
முக்கிய நோக்கங்கள்
எங்கள் 10 முக்கிய நோக்கங்கள்
சமூக நலப்பேரவையின் அமைப்பு நோக்கங்களும், உறுப்பினர் பூசாரிகளுக்காக நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தும் கோரிக்கைகளும்.
பூஜை செய்யும் பூசாரிகளுக்கு ஆகம பூஜா பயிற்சி கொடுத்தல் (தமிழ் + சமஸ்கிருதம்).
60 வயதை கடந்த பூசாரிகளுக்கு அரசிடம் கிடைக்கும் ஓய்வு ஊதியம் பெற ஏற்பாடு செய்தல்.
அனைத்து கிராம கோவில்களிலும் பூஜை செய்யும் பூசாரிகளுக்கு மாத ஊதியம் ரூ.5000 வழங்க அரசை வலியுறுத்துதல்.
அர்ச்சகர்கள் மற்றும் புரோகிதர்களை ஒருங்கிணைத்தல்.
சமூக நலப் பேரவையில் உறுப்பினர்களாக இருக்கும் பூசாரிகளுக்கு (திருமணம்/இறப்பு) மாநில கமிட்டி மூலமாக ரூ.1000/- உடனடியாக வழங்குதல்.
18 வயது முதல் 50 வயது வரை உள்ள பூசாரிகளுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயனடையச் செய்தல்.
சமூக நலப் பேரவையில் உறுப்பினராக சேர்ந்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்துதல்.
கிராமங்கள் தோறும் சமய வகுப்பு நடத்துதல், தீப பூஜை நடத்துதல், பஜனை குழுக்களை ஒருங்கிணைத்தல்.
அருள்வாக்கு சொல்பவர்கள் மற்றும் பாம்பு வாசிப்பவர்களும் பேரவையில் சேர்ந்து பயன் பெறலாம்.
ஒவ்வொரு ஆண்டும் 68 வயது கடந்த பூசாரிகள் மற்றும் பாம்பு ஆசிரியர்களை கௌரவித்தல் மற்றும் விருதுகள் வழங்குதல்.
பேரவையில் இணைந்து பயன்பெறுங்கள்
உறுப்பினராக சேர்ந்து அடையாள அட்டை, பயிற்சி முகாம் தகவல்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறலாம்.